ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான படம் லைகர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் முதல் நாளிலேயே தோல்வி படமாக மாறி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அந்த படத்தை தயாரித்த பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோருக்கும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தெலுங்கு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தியது தனிக்கதை.
இந்த நிலையில் அமலாக்க துறையினர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி இருவரையும் அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். லைகர் படத்தை தயாரிக்க செலவு செய்யப்பட்ட பணம் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு மீண்டும் அங்கிருந்து இங்கே திருப்பி அனுப்பி படம் தொடர்பான செலவுகளுக்கு கருப்பு பணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரிப்பதற்காகத்தான் இவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2001ம் வருடம் தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இவர்கள் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.