'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆண்டுதோறும் ரீயூனியன் என்கிற பெயரில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய நடிகர், நடிகைகள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில்கூட இவர்களது சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாகா மார்டின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் கெட் டு கெதர் என்கிற பெயரில் ஒன்றுகூடி ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இளம் நடிகைகள் கொண்டாட்டத்திற்கு முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர் கல்யாணியின் அம்மாவான சீனியர் நடிகை லிசி தான். இந்த சந்திப்பில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.