நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விவேக் எழுதிய 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது ஏற்கெனவே வெளிவந்த பல பாடல்களின் காப்பி தான் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம் வீடியோக்களை பரப்பி வைரலாக்கினர். குறிப்பாக 'உளவாளி' படத்தில் இடம் பெற்ற 'மொச்சைக் கெட்ட பல்லழகி' என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என்றார்கள். இருப்பினும் 'ரஞ்சிதமே…' பாடல் யு டியூபில் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது.
இந்நிலையில் இப்பாடல் காப்பியா என்பது குறித்த கேள்விக்கு, பாடலை எழுதிய விவேக் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். “படத்தில் வரும் போது 'மொச்சைக் கொட்ட பல்லழகி…' பாடலை பாடிய ஒரு சீன் வந்த பிறகுதான்…'ரஞ்சிதமே..' பாடல் படத்தில் வருகிறது. அந்தப் பாடலுக்கான கிரெடிட்டை படத்திலேயே கொடுத்திருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுப் புற இசையிலிருந்து வந்த பாடல் இது என்றும் அதைப் போன்ற சந்தத்தில் இதற்கு முன்பு தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன், மக்கக் கலங்குதப்பா….., என்னமோ பண்ணலாம்... டிஸ்கோவுக்குப் போகலாம்….எனப் பாடல்கள் வந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஒரு நாட்டுப்புறப் பாடலிலிருந்து எடுத்து பலர் இந்தப் பாடலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ரசிகர்கள் அது போன்ற பாடலை இப்போதும் தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.