மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர் | வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார் 2' படம் டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது.
'அவதார் 2' என அழைக்கப்படும் 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படத்தின் டிரைலரை முதலில் கன்னடம் தவிர மற்ற இந்திய மொழிகளில் மட்டும்தான் வெளியிட்டார்கள். கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடும் எண்ணம் அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். 'கேஜிஎப் 2' சமீபத்தில் 'காந்தாரா' ஆகிய படங்கள் கர்நாடகாவிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கன்னடத்தில் வெளியிடுவதை புதிதாக சேர்த்திருக்கலாம் எனத் தெரிகிறது.
'அவதார் 2' தயாரிப்பாளரான ஜோன் லான்டாவ் அவருடைய சமூக வலைத்தளத்தில் கன்னட வெளியீடு பற்றி தனி பதிவிட்டு, “நமஸ்தே இந்தியா…உங்களை நான் பார்க்கிறேன். உங்கள் பன்முகத் தன்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நீங்கள் 'அவதார் த வே ஆப் வாட்டர்' படத்தை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் பார்க்கும் அனுபவத்தைப் பெறப் போது எனக்கு உற்சாகமாக உள்ளது. டிசம்பர் 16ம் தேதி 'பண்டோரா'வுக்குத் திரும்பச் செல்வதைக் கொண்டாடுங்கள். கன்னட டிரைலரையும் தயவு செய்து ரசியுங்கள்,” என்று குறிப்பிட்டு கன்னட டிரைலரையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.
கன்னடத்தில் படத்தை வெளியிடவில்லையா என கன்னட ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். இப்போது கன்னடத்திலும் படம் வெளியாவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவும் தற்போது இந்தியா சினிமாவில் முக்கிய வசூல் மையமாக மாறிவிட்டது.