''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் |
தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகவும் தேடப்படும் நடிகையாக மாறி விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தற்போது பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா ஒரு பக்கம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் சுற்றுலா என மாறிமாறி பயணித்து வருவதால் அடிக்கடி அவரை விமான நிலையத்தில் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவிடம் நிருபர் ஒருவர் காந்தாரா படத்தை பார்த்து விட்டீர்களா என்று கேட்டதற்கு, இன்னும் பார்க்கவில்லை என்று போகிற போக்கில் பதில் சொல்லிவிட்டு செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகாவை கருத்துக்களாலும் கண்டனங்களாலும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படத்தை ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து விட்ட நிலையில், ராஷ்மிகா தான் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று சொன்னதற்காக மட்டும் நெட்டிசன்கள் அவரை வசைபாடவில்லை.. முதலாவதாக ராஷ்மிகா கன்னட திரையுலகில் இருந்து வந்தவர். அந்த ஒரு மரியாதையிலாவது காந்தாரா படம் வெளியானபோது அவர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கலாம்.. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
அதுமட்டுமல்ல கன்னடத்தில் அவரை தான் இயக்கிய கிரிக் பார்ட்டி என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவரே இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான். அந்தவகையில் தனது குருநாதர் இயக்கிய படம் என்பதற்காகவாவது அந்த படம் வெளியான சமயத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கலாம். படத்தை பார்ப்பதற்கு அவருக்கு ரெண்டு மணி நேரம் ஒதுக்கியிருக்க முடியாதா என்ன? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுபியுள்ளனர்.
ஆனால் ராஷ்மிகா இதுவரை காந்தாரா பற்றி எங்கேயும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனை குறிப்பிட்டு, “ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தவறு”, “பழசை ஒருபோதும் மறக்கக்கூடாது” என்பது போன்று கடினமான வார்த்தைகளால் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தான் கன்னடத்தில் அறிமுகமாகிய அந்த படத்தின் கதாநாயகன் ரக்சித் ஷெட்டியுடன் காதலில் விழுந்து திருமண நிச்சயம் வரை சென்ற ராஷ்மிகா, அதன் பிறகு தெலுங்கில் அவருக்கு கிடைத்த திடீர் புகழால், அவரிடமிருந்து விலகி சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கியதுடன் கன்னட திரையுலகை விட்டே கிட்டத்தட்ட ஒதுங்கியபடியே இருப்பதும் காந்தாராவை பற்றி அவர் கண்டுகொள்ளாததற்கு காரணம் என்று இன்னும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி சோஷியல் மீடியாவில் காந்தாரா விஷயத்திற்காக தான் ட்ரோல் செய்யப்பட்டதை மனதில் வைத்து தான் சமீபத்தில் தனது மனக்குமுறலாக வெளிப்படுத்தி இருந்தார் ராஷ்மிகா.