'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
செலக்டிவ் ஆக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் 'காதல் ; தி கோர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜோதிகா. விமர்சனரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜியோ பேபி இயக்குகிறார். அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா திடீர் விசிட் அடித்துள்ளார். அதுமட்டுமல்ல படக்குழுவினருக்கு தனது கையாலே பிரியாணி சமைத்து கொடுத்து அவர்களை அசத்தியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சூர்யா பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.