மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

எண்பதுகளில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட ஜோடியாக ரஜினிகாந்த் - ராதா ஜோடி முன்னணியில் இருந்தது. கிட்டத்தட்ட 7 படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். பெரும்பாலும் எல்லா படங்களுமே வெற்றிப்படங்கள் தான். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததும் அதை படமாக்கினால் அதில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பியதாக கூறினார். மேலும் கமல் - அருள்மொழி வர்மன் ஆகவும், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த், பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ், நந்தினியாக ஹிந்தி நடிகை ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி, பூங்குழலியாக ராதா ஆகியோர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் வெளியாகி தற்போது அதன் வெற்றி விழாவையும் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் அப்போது பேசிய அந்த பேச்சை ராதா இப்போதுதான் கேட்டிருப்பார் போல தெரிகிறது.. இதைத்தொடர்ந்து ராதா தற்போது இந்த மிகப்பெரிய நாவலில் பூங்குழலி கதாபாத்திரத்திற்காக தன்னை பொருத்தி பார்த்ததற்காக ரஜினிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




