டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை சாச்சி இயக்கியிருந்தார். இந்த படத்தின் துவக்க காட்சியிலேயே இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை அட்டப்பாடி மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான நஞ்சியம்மா என்பவர் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுடன் நஞ்சியம்மாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தப் பாடலுக்காக நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
மேலும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வந்துபோகும் மிகச்சிறிய வேடம் ஒன்றிலும் நடித்து இருந்தார் நஞ்சியம்மா. இந்த நிலையில் தற்போது டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாகும் திரிமூர்த்தி என்கிற படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நஞ்சியம்மா. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சரத்லால் நேமிபுவன் என்பவர் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.




