Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா தமிழில் அறிமுகமாகும் சீன் நம்பர் 62

03 அக், 2021 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Malayalam-Singer-Nanjiyamma-Debuts-In-Tamil

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா சீன் நம்பர் 62 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஐயப்பனும் கோஷியும் படத்தில் அவர் பாடிய கலக்காத... பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.


சீன் நம்பர் 62 திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார். மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது, திகில் கலந்த கிரைம் திரில்லரான 'சீன் நம்பர் 62'.


'ஆதாம்' திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த 'ஆதாம்' சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'சீன் நம்பர் 62' திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் சீன் நம்பர் 62' படமாக்கப்பட்டுள்ளது.


தமிழில் 'இரட்டையர்' மற்றும் தெலுங்கில் ஓய் இடியட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, 'சீன் நம்பர் 62'-க்கு இசை அமைக்கிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'பாம்பு சட்டை', 'ஜோதி' மற்றும் டைரி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ் ஆர் ராஜா சேதுபதி 'சீன் நம்பர் 62'-ன் எடிட்டர் ஆவார். பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை 'மிரட்டல்' செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி.கே.தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.


அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர். ரஜீஷ் பதம்குளம் மற்றும் ரினீஷ் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு 'சீன் நம்பர் 62' விரைவில் வெளியாகவுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூதாட்டியை வைத்து படம் இயக்கும் பிரபு சாலமன்மூதாட்டியை வைத்து படம் இயக்கும் ... பெப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்; விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி பெப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in