பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜியோ பேபி. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை ஜோதிகா. இந்த படத்தில் அவர் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'காதல் ; தி கோர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 70 வயதைத் தாண்டிய மம்முட்டி நடிக்கும் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா என பலரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மம்முட்டி அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் கேரளாவில் பல இடங்களில் வைக்கப்பட்டு திடீரென பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பின் அதை உற்று கவனிக்கும்போதுதான் அந்த போஸ்டரில் அந்த படத்தில் மேத்யூ தேவசி என்கிற அவரது கதாபாத்திர பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆம் இந்தப்படத்தில் இடதுசாரி அரசியல்வாதியாக நடிக்கிறார் மம்முட்டி. அதுமட்டுமல்ல இந்த படத்தில் அவர் போட்டியிடும் சின்னமாக டார்ச்லைட் ஒதுக்கப்பட்டுள்ளது.