கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு |

2023ம் ஆண்டு பொங்கலுக்கு தற்போதைய டிரெண்டிங் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக உரிமையை வாங்கியுள்ளது. அதனால், விஜய் நடித்து வெளிவரும் 'வாரிசு' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 'வாரிசு' படத்தை உதயநிதி வாங்கவில்லை என்றாலும் அவருடைய கம்பெனிதான் அப்படத்தை தமிழகத்தில் பெயர் இல்லாமல் வெளியிட உள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'வாரிசு, துணிவு' இரண்டு படங்களுமே தமிழகத்தில் சம அளவிலான தியேட்டர்களில் வெளியாகும் என உதயநிதி தெரிவித்துள்ளார். 'துணிவு' படத்தை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே வாங்கிவிட்டதாகவும் தீபாவளிக்குப் பிறகு அறிவிக்கலாம் என இருந்ததாகவும் மேலும் கூறியுள்ளார். 'வலிமை' படத்தையும் எங்கள் கம்பெனி பெயர் இல்லாமல் சில ஏரியாக்களில் வினியோகித்தோம் என்றும் அந்தப் பேட்டியில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விஷயத்தில் இனி விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. படத்தின் தரத்தைப் பொறுத்து அப்போது வசூல் நிலவரம் இருக்கப் போகிறது.