அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா | குஷி படப்பிடிப்புக்கு திரும்பிய சமந்தா |
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆதிபுருஷ். ஹிந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் வால்மீகி எழுதிய ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்து விட்டார்கள்.
அப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, ஆதிபுருஷ் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததோடு, சில காட்சிகளை திருப்தி இல்லாமல் ரீஷூட் பண்ணவும் படக்குழு திட்டமிடப்பட்டிருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் தற்போது அந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், ஆதிபுருஸ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்றும், ஏற்கனவே படமாக்கிய காட்சிகளை திருப்தி இல்லாமல் ரீஷூட் செய்யப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. மறு படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அப்படக்குழு, ஆதிபுருஷ் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அதிக நேரம் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.