பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ் சினிமாவில் கல்யாண சீசன் ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்புதான் கவுதம் கார்த்திக், மஞ்சிமா ஜோடி தங்களது காதலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். விரைவில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஹன்சிகாவின் திருமணம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அது உண்மையா, வதந்தியா என்பதற்கு ஹன்சிகா முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.
தனது சமூக வலைத்தளத்தில் தனது காதலர் சோஹைல் கத்தூரியா-வுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு 'இன்றும், என்றென்றும்' எனக் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் அருகில் 'என்னைத் திருமணம் செய்து கொள்” என்ற ஆங்கில வாசகங்களுடன் சுற்றிலும் மெகுழுவர்த்தி, மத்தாப்பு ஆகியவற்றுடன் ஒரு கொண்டாட்டமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.
சோஹைல், ஹன்சிகா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருக்கிறார்கள். இவர்களது திருமணம் ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுவதாகத் தகவல்.
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா. வாய்ப்புகள் சற்றே குறைந்தாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹன்சிகாவின் காதலர் அறிமுகப் பதிவுக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.