பிளாஷ்பேக் : சோலோ ஹீரோயினாக நடித்த வி.என்.ஜானகி | பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | ஒரு படம் வருவதற்கு முன்பே பிஸியாகும் சாய் அபயங்கர் | வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை : தொடர் பேச்சுவார்த்தை.... 6 மணி காட்சி வெளியாக வாய்ப்பு | விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. அவரது உடல் நிலை குறித்து பதிவிட்டதும், நாகார்ஜுனாவின் மற்றொரு மகனான அகில், சமந்தா நலம் பெற வாழ்த்து தெரிவித்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
அதே சமயம் முன்னாள் கணவரான நாக சைதன்யா, மாமனார் நாகார்ஜுனா எந்த விதமான பதிவும் போடவில்லை. ஆனால், நாகார்ஜுனா சமந்தாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. அவருடன் நாக சைதன்யாவும் செல்வாரா அல்லது இந்தத் தகவல் வெறும் வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
முன்னாள் மருமகள் என்று பார்க்காமல் சக நடிகையாக சமந்தாவின் உடல்நலம் குறித்து விசாரித்து நாகார்ஜுனா, நாக சைதன்யா பதிவிட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து பரவியது.