பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
கன்னடத் திரையுலகில் எண்ணற்ற ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவருடைய மரணம் இந்தியத் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. விழாவில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஷ்வினி பெற்றுக் கொண்டார்.
கொட்டும் மழையில் நேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு கன்னடத்தில் பேசியதற்கு முதலமைச்சர் பசவராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எங்கள் அன்பான அழைப்புக்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதற்காக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தினர். என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து அவர்களுக்கு எனது நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அவரது பேச்சை நிறைவு செய்யும் போது,, “இங்கு தமிழ் மக்களும் வந்திருக்கிறீர்கள். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்,” என்று தமிழிலும் பேசி தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.