சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் 'லைகர்'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் படத்தை வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான பூரி ஜெகன்னாத்திடம் நஷ்ட ஈடு கேட்டனர் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையாத நிலையில் பூரி ஜெகன்னாத் வீட்டை முற்றுகையிடப் போவதாக வினியோகஸ்தர்கள் வாட்சப் மூலம் தகவலைப் பரப்பினர். அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்தி பணத்தைப் பெற, பிளாக் மெயில் செய்வதாகவும், படத்தின் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, மற்றும் பைனான்சியர் சோபன் ஆகியோர் மீது ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர்கள் இது தொடர்பாக சட்டப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும், அதை விடுத்து என்னை மிரட்டக் கூடாது. நான் தற்போது மும்பையில் இருப்பதால் ஐதராபாத்தில் இருக்கும் எனது வீட்டில் உள்ள வயதான எனது மாமியார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.