பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'யசோதா'. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தை ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.
ஹரி, ஹரிஷ் இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று(அக்., 27) மாலை வெளியாக உள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை அந்தந்த மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளார்கள்.
தமிழ் டிரைலரை சூர்யா, தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டா, மலையாள டிரைலரை துல்கர் சல்மான், கன்னட டிரைலரை ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தி டிரைலரை வருண் தவன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். ஹீரோக்களின் படங்கள்தான் சமீப காலங்களில் பான் இந்தியா படங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போது சமந்தா நடித்துள்ள 'யசோதா' பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.




