துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! |
தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் நடித்து வரும் 'வாரிசு' படம் பற்றிய அப்டேட் வரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அது போலவே தீபாவளிக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினார்கள்.
வார இதழுக்கு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அளித்த பேட்டியில் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. அவற்றைப் பார்த்ததும் தெலுங்கு படங்களை அதிகம் பார்க்கும் தமிழ் ரசிகர்களும் புதிய சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, நரேஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'மகரிஷி' படத்திற்கும், வம்சி தற்போது இயக்கி வரும் விஜய்யின் 'வாரிசு' படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
'மகரிஷி' படத்தின் ரீமேக் தான் 'வாரிசு' என்று இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இரண்டு படங்களின் கதாபாத்திரங்கள், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது.
மகேஷ் பாபு கதாபாத்திரத்தில் விஜய், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, நரேஷ் கதாபாத்திரத்தில் ஷாம் ஆகிய முக்கிய கதாபாத்திர நடிகர்களும் மற்ற கதாபாத்திர நடிகர்களும் பொருந்திப் போகிறார்கள். 'மகரிஷி' திரைப்படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் 'வாரிசு' படத்தையும் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் வெளிவந்த 'ஒக்கடு' படம் விஜய் நடிக்க 'கில்லி' ஆகவும், மகேஷ் பாபு நடித்த 'போக்கிரி' படம் விஜய் நடிக்க 'போக்கிரி' ஆகவும் ரீமேக்காகி பெரும் வெற்றியை இங்கு பெற்றது. அது போல 'மகரிஷி' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில பல மாற்றங்களைச் செய்து கூட ரீமேக் செய்திருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.