நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்களில் சர்தார் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும், பிரின்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுரையில் உள்ள சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். புதிய படங்களுக்கென்று ஒரு கூட்டம் தியேட்டருக்கு சென்றாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதால் இந்த படம் நேற்று வெளியிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு எம்ஜிஆரின் ரசிகர்கள் பேனர்கள் கட்டி இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.