கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிரபல கிரிக்கெட் வீரரான தோனி தனது பெயரிலேயே தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை மையமாகக் கொண்டு ரோர் ஆப் தி லயன் என்ற ஆவணப்படத்தை தயாரித்தவர், அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற பெயரில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு குறும்படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் தங்களது முதல் தமிழ் படத்தை தயாரிக்கப் போகிறது. இதற்கான கதையை தோனியின் மனைவியான சாக்ஷி தோனி எழுதி இருக்கிறார். அதர்வா - தி ஆர்ஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இது மட்டுமின்றி அறிவியல் புனைவு கதைகள், குற்றவியல் நாடகங்கள், சஸ்பென்ஸ் திரில்லர், நகைச்சுவை என பல வகையான கதைகளும் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கவும் தற்போது திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி எண்டர்டைய்ன்மென்ட் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.