சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. தியேட்டரில் வெளியாகாத இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதோடு 68வது தேசிய விருது பட்டியலில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட 5 விருதுகளையும் வென்றது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு எட்டு பிலிம்பேர் விருதுகள் கிடைத்திருக்கிறது.
இந்த விழாவில் சூர்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ரைவலானது. அதில், ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் சூரரைப்போற்று. இந்த படம் தியேட்டரில் வரவில்லை என்று வருத்தப்பட்டபோது ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக வெற்றி பெற்றது. நேஷனல் அவார்டு வரைக்கும் இந்த படத்தை போக வைத்தது ரசிகர்கள் தான். நீங்கள் தான் சூரரைப்போற்று படத்தை எல்லா இடத்திற்கும் கொண்டு போய் சேர்த்தீர்கள். நீங்கள் தான் இந்த வெற்றியை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். நாம ஜெயிச்சிட்டோம் அன்பான பேன்ஸ் நாம ஜெயிச்சுட்டோம் என ரசிகர்களை பார்த்து சூர்யா பேசியுள்ளார்.