டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமா உலகில் இப்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் அதிகமான ரசிகர்களைக் கொண்டவர்களில் விஜய், அஜித்திற்கு இடையேதான் போட்டி நிலவி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் இருவரின் ரசிகர்கள்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பைனான்சியராக, தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக உள்ள மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் நேற்று நடைபெற்ற 'பிரின்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் பேசியிருக்கிறார்.
“தமிழ் சினிமாவுல எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவா ஒரு சிலர்தான் இருப்பாங்க. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஐயா இருந்தாரு, அதற்கடுத்து ரஜினி சார், அதற்கடுத்து விஜய் சார், அந்த வரிசையில இப்ப சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பினரும் பிடித்த ஹீரோவா இருக்காரு,” என்று பேசினார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனும் நன்றி என்பதை கைகூப்பி அவருக்கு வணக்கமாய் தெரிவித்தார்.
ரஜினிகாந்த், விஜய் இருவரும் இன்னமும் டாப் வசூல் நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கடுத்து சிவகார்த்திகேயனை அன்புச் செழியன் சேர்த்துப் பேசியது மற்ற ஹீரோக்களின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் ஆகியோர் அந்த இடத்தில் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்றே கோலிவுட்டிலும் கிசுகிசுக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டாக்டர், டான்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் 'பிரின்ஸ்' படமும் இடம் பிடித்தால் அவரது மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும். சிவகார்த்திகேயன் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.