போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உட்பட பலர் நடித்து வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதோடு புரொமோஷன் பணிகளையும் ஆரம்பித்து விட்டார்கள். அதன் முதல் கட்டமாக வாரிசு படத்தின் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. தீபாவளி 24ம் தேதி என்பதால் அதற்கு முந்தின நாள் அன்று விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது. வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.