கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவில் ஒருசில குறும்படங்களை இயக்கி, பின்னர் இயக்குனர் சுசி கணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமயத்தில், அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் லீனா மணிமேகலை. அதைத் தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்றும் சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தன்யா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்சி இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் மணிமேகலை. இந்தப்படம் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.