ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகத்தாய் மூலம் குழந்தை பெற்றது சட்டவிரோதம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பிரபல ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சமீபத்தில் 2022ம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர், பின்னர் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இரட்டை குழந்தைகளைப் பெற்றதாக இந்த ஜோடி அறிவித்தது.
2022 ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2022 அக்டோபரில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்ததால், இருவரும் பிரபலங்கள் என்பதால், இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடகைத் தாய் மற்றும் இட்பிஸ் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு வகுத்துள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக இதனை அவர்கள் செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் பொதுவானது, எனவே இது சமூகத்திற்கு எதிரான கடுமையான குற்றமாகும். மேலும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்க இளம் தலைமுறையினரைத் தூண்டியுள்ளது. மக்கள் மத்தியில் சட்ட விரோதமாக வாடகைத் தாய் முறையை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் செயல்பாடு அமைந்துள்ளது. எனவே இதனுடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவில் வாடகைத்தாய் தொடர்பான சட்டவிதிமுறைகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.




