மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஹாலிவுட் நடிகர் ரூபி கால்ட்ரனி மரணம் அடைந்தார். புகழ்பெற்ற ஹாரிபார்ட்டர் படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கேரக்டரில் நடித்து உலக புகழ் பெற்றவர் அவர். ஹாரிபார்ட்டர் படத்தில் வரும் குழந்தைகளுக்கு உதவுபவராக அவர் நடித்ததால் உலகம் முழுக்க உள்ள குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக இருந்தார்.
அதோடு கோல்டன் ஐ உள்ளிட்ட பல ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். கிராக்கர் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். ஏராளமான புத்தகங்ளும் எழுதி உள்ளார். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து ஹாலிவுட் நடிகர் ஆனார். 72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகம் முழுக்க உள்ள ஹாரிபார்ட்ர் ரசிகர்களும், ஹாலிவுட் திரைபிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.