இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்தார்.
இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி உள்ளது. அதேசமயம் சிரஞ்சீவின் படத்திற்கு இந்த வசூல் குறைவு என்றே விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடிக்க, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இந்நிலையில் வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.