ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தற்போது தனி இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ம லையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் வெளியிடும் இசை ஆல்பம் 'ஓ பெண்ணே...' இதன் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.
வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேவி ஸ்ரீ பிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதமாவதை எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.
திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், இளையராஜாவே ஆனாலும் அவர் படத்தின் கதைக்குள்தான் இசை அமைத்தாக வேண்டும். சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். இது தனித் துறையாக வளர வேண்டும்.
மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள் நடிகர்களை விட அவர்கள் பாப்புலராக இருக்கிறார்கள். தனி விமானங்களில் பயணிக்கிற அளவிற்கு வசதியானவர்களாக இருக்கிறார்கள்.. திரைப்படங்களை விட மிகபெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.