அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கன்னட மொழியில் உருவாகிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யப்பபோவதாக பிருத்விராஜ் அறிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வருகிற 14ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.