விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தென்னிந்திய அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பிலிம்பேர் விருதுகள் மதிப்புற்குரிய விருதுகளாகக் கருதப்படுகிறது. கடந்த 66 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் வெளிவந்த படங்களை வருடம் வாரியாக தனித் தனியாகத் தேர்வு செய்யாமல், ஒன்றிணைத்து விருதுகள் வழங்கப்பட்டது. நடிகையர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் பல தென்னிந்தியக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க விழா நடைபெற்றது.
பிலிம்பேர் விருதுகளை வென்ற கலைஞர்கள்
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த திரைப்படம் - ஜெய் பீம்
சிறந்த இயக்குனர் - சுதா கோங்கரா (சூரரைப் போற்று)
சிறந்த துணை நடிகர் - பசுபதி (சார்பட்டா பரம்பரை)
சிறந்த துணை நடிகை - ஊர்வசி (சூரரைப் போற்று)
சிறந்த இசை ஆல்பம் - சூரரைப் போற்று - ஜிவி பிரகாஷ்குமார்
சிறந்த பின்னணிப் பாடகர் - கிறிஸ்டின் ஜோஸ், கோவிந்த் வசந்தா - (ஆகாசம்…பாடல் - சூரரைப் போற்று)
சிறந்த பின்னணிப் பாடகி - தீ (காட்டுப் பயலே…பாடல் - சூரரைப் போற்று)
சிறந்த நடனம் - தினேஷ் குமார் (வாத்தி கம்மிங்… ஞ மாஸ்டர்)
சிறந்த ஒளிப்பதிவு - நிகேத் பொம்மி ரெட்டி (சூரரைப் போற்று)