டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான பிறகு தியேட்டர்கள் மூடப்பட்டன. அதனால், பொழுதுபோக்கிற்காக மக்கள் ஓடிடி தளங்கள் பக்கம் சென்றனர். அங்கு இதுவரை பார்க்காத படங்கள், மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படங்கள், மற்ற மொழிகளில் சிறந்த படங்கள் என தேடித் தேடிப் பார்த்தார்கள்.
அதனால், மற்ற மொழிகளில் நேரடியாகப் பார்த்து ரசித்த படங்கள் தங்களது மொழிகளில் ரீமேக் ஆகி வெளிவரும் போது அதைப் பார்க்கும் ஆர்வம் அவர்களுக்குக் குறை ஆரம்பித்தது. கடந்த இரண்டு வருடங்களாக ரீமேக் படங்களைப் பார்க்க மக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. பிரபலங்கள் நடித்தாலும் கூட அதன் ஒரிஜனலைத்தான் ஏற்கெனவே பார்த்து விட்டோமே என்ற எண்ணம் ஏற்பட்டது.
இது சமீபத்தில் இரண்டு மொழிகளில் வெளிவந்த முக்கிய படங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பெரும் வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. 100 கோடி வசூலை தட்டுத் தடுமாறி இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனாலும், படம் நஷ்டத்தைத்தான் தரும் என்று பாலிவுட்டில் சொல்லிவிட்டார்கள்.
அடுத்தது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற 'லூசிபர்' படம் தெலுங்கில் ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளிவந்தது. படம் பெரிய வசூலைக் குவிக்க முடியாமல், எதிர்பார்த்ததை விடவும் மிகச் சுமாரான வசூலையே பெற்று வருகிறது. சிரஞ்சீவி படம் என்பதற்கான வசூலே படத்திற்கு இல்லை என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதனால், இனி ரீமேக் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயங்குவார்கள் என்பதை இந்தப் படங்களின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ரீமேக் உரிமை என்பது இல்லாமல் போகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக டப்பிங் உரிமை, ஓடிடிக்காக நல்ல விலைக்கு விற்கப்படலாம்.