''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
திரைப்படக் கல்லூரியையும் அதில் படித்த மாணவர்களை தீண்டத்தகாத கூட்டமாக கருதியது அன்றைய சினிமா கூட்டங்கள். அடக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்கள் எப்போதாவது வீறுக்கொண்டு எழுந்து அடிப்பது தான் இந்த உலகத்தின் வரலாறு. அப்படி தான் 1986 காலத்தில் நடந்தன.
#ஊமைவிழிகள் மூலமாக ""A FILM by FILM STUDENTS"" விதை போட்டு ஆலமரமாக வளர்த்து இன்று எண்ணற்ற திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்த ஒரு மகா கலைஞன் "திரைப்பட கல்லூரியின் காட்பாதர் கேப்டன் விஜயகாந்த்".
அதன் பின்னர் அந்த "ஆலமரத்தடியில்" அவருமே மிகப்பெரிய நடிகனாக #செந்தூரப்பூவேவாக, உழவன்மகனாக , சின்ன கவுண்டராக, புலன்விசாரணை, கேப்டன்பிரபாகரனாகவே மாறினார்.
இன்று இந்தியா முழுக்க "ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படித்த தொழில்நுட்ப கலைஞர்கள்" கோலோச்சி நிற்கிறார்கள் எனில் அதற்கு முதலில் வாய்ப்பு கொடுத்து தண்ணீர் ஊற்றிய இந்த மனிதனை நினைவில் நிற்க வைப்பது என்பது காலம் நமக்கு தந்த பெரிய பொக்கிசம்.
கேப்டன் நீங்கள் மறைந்தாலும், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எங்கள் "தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி" உங்களை மனசார போற்றும்.
அமெரிக்காவில் இருந்து நடிகர் நெப்போலியன் இரங்கல் செய்தி
உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..! தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி
கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!!
அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!
அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம், அவருடன் நண்பர் சரத்குமார் அவர்களும், நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!
கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!
வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!