செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கடந்த மாதம் வெளியான 'சைத்ரா' என்ற படத்தில் பேயாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். இந்த நிலையில் நாளை வெளிவர இருக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற பேய் படத்திலும் நடித்திருக்கிறார்.
இதில் சத்யமூர்த்தி, விஜயகுமார் ராஜேந்திரன், கோபி அரவிந்த், சுதாகர் ஜெயராமன், ஜார்ஜ் மரியான், ரித்விகா, ஹரிஜா, கிரேன் மனோகர், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முனிஷ்காந்த் முதன் முறையாக வில்லனாக நடித்துள்ளார். ரமேஷ் வெங்கட் இயக்கி உள்ள இந்த படத்திற்கு கவுஷிக் கிரிஷ் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ரமேஷ் வெங்கட் கூறும்போது “ஒரு தியேட்டருக்கு சிலர் ஆபாச படம் போடுவதாக அறிந்து பார்க்க செல்கின்றனர். யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சில பெண்களும் போகிறார்கள். அங்கு பேய் வருகிறது. தியேட்டருக்குள் அவர்கள் சிக்கி கொள்வதும் அதில் இருந்து தப்பினார்களா? என்பதும் கதை. படத்தில் நிறைய யூடியூபர்கள் நடித்து இருக்கிறார்கள். பெரும்பாலான கதை தியேட்டருக்குள்ளேயே நடக்கும். காமெடி ஹாரர் படமாக உருவாகி உள்ளது. என்றார்.