செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
2020ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது 'பாரசைட்' என்ற கொரியன் படத்திற்கு கிடைத்தது. அதோடு சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு உள்பட பல பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை பெற்று உலக அளவில் இந்த படம் கவனம் பெற்றது. ஒரு ஏழை குடும்பம், பணக்கார வீட்டில் பணியாற்றிக் கொண்டே பணக்கார வாழ்க்கையை அனுபவிப்பது மாதிரியான கதை. இந்த படத்தில் ஏழை குடும்பத்தின் தலைவராக நடித்தவர் லீ சன் கியூன் என்ற கொரியன் நடிகர்.
48 வயதான லீ சன் கியூன் போதை பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் மர்மமான முறையில் காருக்குள் இறந்து கிடந்துள்ளார். லீ சன் கியூன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடக்கிறது. கொரியன் சினிமாவின் முக்கியமான குணசித்ர நடிகரான லீ சன் கியூனின் மரணம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.