விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சோழர்கள் சாம்ராஜ்யத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் ரிலீசாவதற்கு முன்பாகவே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சோழர்கள் வரலாறு பற்றி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களையும் தேடல்களையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.
இந்த சமயத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இப்போது ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் பேன்டஸி கலந்த பிக்சன் படமாக உருவாகி இருந்த அந்த படத்தில் சோழர்கள் வரலாறு பற்றியும் ஒரு பகுதியாக சொல்லியிருந்தார் செல்வராகவன். அதுமட்டுமல்ல அந்த படத்தில் இணைந்து நடித்த கார்த்தி, பார்த்திபன் இருவருமே இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளதால் அதுகுறித்த பேச்சுக்களும் செல்வராகவனுக்கான பாராட்டுக்களும் சோசியல் மீடியாவில் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து ஒரு பேட்டியில் செல்வராகவன் கூறும்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்த சமயத்தில் படத்தின் பட்ஜெட்டை விட 12 கோடி ரூபாய் அதிகமானதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சிரமப்படக்கூடாது என்பதற்காக வங்கி மற்றும் பைனான்ஸ் மூலமாக 12 கோடி ரூபாய் கடன் வாங்கி அந்த படத்தை முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக தான் செலவிட்ட பணத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எந்தவிதமான பங்கையும் கேட்கவில்லை என்றும் அப்படி கடன் வாங்கிய பணத்தை செட்டில் செய்வதற்கு தனக்கு எட்டு வருடங்கள் ஆனது என்றும் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் செல்வராகவன்.