என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
நடிகரும், தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள அவரது சொத்து விவரங்கள் பற்றி சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கமல்ஹாசனின் அசையும் சொத்தாக 245 கோடிய 86 லட்ச ரூபாயும், அசையா சொத்தாக 59 கோடியே 69 லட்சம் இருப்பதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடனாக 49 கோடியே 67 லட்ச ரூபாய் இருக்கிறதாம்.
2023 மற்றும் 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த வருமான வரிப்படி அவரது வருமானம் 78 கோடியே 90 லட்சமாக இருந்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் 2, உத்தண்டியில் ஒன்று, சோழிங்கநல்லூரில் ஒன்று என மொத்தம் 4 கமர்ஷியல் பில்டிங் அவருக்கு உள்ளது. அவற்றின் மார்க்கெட் மதிப்பு 111 கோடியே 10 லட்சம். திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி கிராமத்தில் 22 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டு விவசாய நிலம் உள்ளது.
ஒரு பிஎம்டபிள்யூ கார், ஒரு லெக்சஸ் கார், மெர்சிடிஸ் பென்ஸ், மகிந்திரா பொலேரோ ஆகிய கார்கள் அவருக்கு உள்ளன.
மேலும் அவரது அபிடவிட்டில் சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் பள்ளியில் 8வது வரை படித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தாக்கல் செய்த விவரங்களின்படி 45 கோடிக்கு அசையும் சொத்துக்களும், 131 கோடிக்கு அசையா சொத்துக்களும் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன். அப்போதைய மொத்த சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சம் ஆக இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து தற்போதைய வேட்பு மனுவில் 305 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.