சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
கடந்த 20 வருடங்களாக ரசிகர்களின் மனதில் கனவு படமாகவே தங்கியிருந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு தற்போது திரை வடிவில் உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். கடந்தவாரம் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நாவலின் தீவிர வாசகர்கள் என்பதால் அவர்களும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு தங்களது வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இதற்கான சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த சுகாசினி மணிரத்னம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், “மேஸ்ட்ரோ இளையராஜா எங்களது படத்தை பார்த்தது மிகப்பெரிய கவுரவம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மணிரத்னம் இயக்குனராக அறிமுகமானதிலிருந்து 1993-ல் வெளியான தளபதி படம் வரை தொடர்ந்து இளையராஜாவுடன் மட்டுமே இணைந்து பணியாற்றி வந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் காலத்தால் மறக்க முடியாத மிகச்சிறந்த பாடல்களை கொடுத்துள்ளன.
தளபதி படத்திற்குப்பின் இளையராஜாவிடம் இருந்து பிரிந்த மணிரத்னம் இப்போதுவரை ஏ.ஆர்.ரகுமானுடன் மட்டுமே பயணித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் உருவாக ஆரம்பித்த சமயத்தில் கூட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.