சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரமும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடர்கிறது.
தமிழகத்தைத் தவிர வெளிநாடுகளில் அமெரிக்காவில் தான் இந்தப் படம் அதிக வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான கடந்த வார இறுதி நாட்களில் மட்டுமே இப்படம் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அள்ளியது. இப்போது 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் வசூலாகும் தொகையுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தின் அமெரிக்க வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான வசூலை அமெரிக்காவில் மட்டும் பெற்றுவிடும். அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விடவும் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.