தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் |
விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா- 2 மற்றும் ஹிந்தியில் மூன்று படங்களில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா . விரைவில் அவர் நடித்துள்ள குட் பை ஹிந்தி படம் திரைக்கு வருவதால் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா. அப்போது கன்னட ஹீரோ ரஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற அவரது திருமணம் தடைப்பட்டது பற்றி அவரிடம் மீடியாக்கள் கேட்டபோது, நான் எப்போதுமே ஒரு நவீன பெண். திருமணம் தடைபட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. என்றாலும் எனது முன்னால் நண்பர்களை நான் பகைத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து அவர்களுடன் நட்பை கடைபிடித்து வருகிறேன். அந்த வகையில் ரஷித் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இப்போதும் நல்ல நட்பில் இருக்கிறேன். எங்கள் நட்பு தொடரும் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.