கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு பெருமை தமிழில் நடிக்க வந்த ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரையில் அதிக பொருட் செலவில் தயாரான இரண்டு பிரம்மாண்டப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். ஒரு படம் 'எந்திரன்'. தமிழில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்து லாபத்தைக் கொடுத்த படம். மற்றொரு படம் தற்போது வெளிவந்துள்ள 'பொன்னியின் செல்வன்'.
இரண்டு படங்களிலுமே ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் வழக்கமான கதாபாத்திரங்களை விட மாறுபட்ட கதாபாத்திரங்கள். அவரை விட அதிக வயது கதாநாயகர்களுடன் இரண்டு படங்களிலும் ஜோடி சேர்ந்திருந்தாலும் அவருடைய அழகையும், நடிப்பையும் ரசிகர்கள் ஆராவாரத்துடன் ரசித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் தமிழ்க் கதாநாயகிகளை விடவும் வேறு மொழியிலிருந்து வந்த கதாநாயகிகள்தான் அதிகப் பெயரைப் பெறுவார்கள். அந்த விதத்தில் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ஹிந்தியில் ஐஸ்வர்யா எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் 'எந்திரன், பொன்னியின் செல்வன்' இரண்டு படங்களும் அவருடைய ஒட்டு மொத்த திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களாக இருக்கும்.
அதை அவரும் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் 'பொன்னியின் செல்வன்' படத்தை இங்கு பார்க்க மும்பையிலிருந்து மகளுடன் கிளம்பி வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.
'எந்திரன்' சனா கதாபாத்திரமும், 'பொன்னியின் செல்வன் 1' நந்தினி கதாபாத்திரமும் மறக்க முடியாதவை. அடுத்து 'பொன்னியின் செல்வன் 2' மந்தாகினி கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.