ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு உள்ள படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட்டது.
யு-டியுபில் 24 மணி நேரத்திற்குள் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் சேர்த்து சுமார் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு நடிகர் ஒருவர் நாயகனாக நடித்துள்ள ஒரு படத்தின் டீசருக்கு இந்த அளவிற்கு பார்வைகள் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ராதே ஷ்யாம்' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. அதை 'ஆதி புருஷ்' படம் முறியடித்துள்ளது.
24 மணி நேரத்தில் ஹிந்தி டீசர் 69 மில்லியன் பார்வைகளை, தெலுங்கு டீசர் இரண்டு யு டியுப் சேனல்களில் 14 மில்லியன், தமிழ் 8 மில்லியன், மலையாளம் 6 மில்லியன், கன்னடம் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.53 மில்லியன் லைக்குகள் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளது.
இவ்வளவு வரவேற்பு கிடைத்திருந்தாலும் மறுபக்கம் இந்த டீசரை விமர்சித்து பல மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ்கள் கடந்த இரண்டு நாட்களாகப் பரவி வருகிறது. பிரபாஸை நடிக்க வைத்து ஒரு கார்ட்டூன் படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.