கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

ஒரு தலைமுறையை கடந்த பின்னும் இன்றைய இளையதலைமுறை ஹீரோயின்களுக்கே அழகில் டப் கொடுத்து வருகிறார் நடிகை சுஜிதா தனுஷ். 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல் நடிகையான இவர் இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட்டாகிவிட்டார். தற்போது விஜய் டிவியில் பட்டையை கிளப்பி சூப்பர் ஹிட் அடித்து வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் தனம் கேரக்டரில் அசத்தி வருகிறார். பல இளம் நடிகைகள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர விதவிதமாக போட்டோஷூட்களை ட்ரை செய்து வருகின்றனர். ஆனால், சுஜிதாவோ ஒரு சாதாரண சுடிதாரில் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் மிகவும் கேசுவலாக சில க்ளிக்குகளை எடுத்து பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் 'வாவ்' சொல்லி வருகின்றனர்.