இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

சமீப காலமாக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் தான் வாங்கிய வீட்டில் குடியேறி இருக்கும் நயன்தாரா, அங்கு ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் பழங்கால பொருட்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகை பூச்சூடி, மங்களகரமாக இந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நயன்தாரா. அவர் அணிந்துள்ள இந்த புடவையை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனு என்பவர் தான் வடிவமைத்திருக்கிறார்.
அவர் நடத்திவரும் கைத்தறி ஆடை விற்பனை நிலையத்துக்கு புரமோஷன் செய்யவே இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் தற்போது மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன்-2 படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.