‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரைப்படங்களில், வித்தியாசமான, புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களின் பட்டியலில், பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் உண்டு. படத்துக்கு படம், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும், அவர், சமீபத்தில் வெளியான ஒரு தெலுங்கு படத்தில், நிர்வாணமாக நடித்துள்ளார்.பிரகாஷ் ராஜின், இந்த துணிச்சலான முயற்சி, ஆந்திர ரசிகர்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சர்ச்சை எழுந்ததை அடுத்து, இதற்கு விளக்கம் அளித்துள்ளார், பிரகாஷ் ராஜ்."இதுவரை நான் நடித்த வேடங்களிலேயே, மிகவும் வித்தியாசமான வேடம், இந்த படத்தில் தான் கிடைத்தது. தந்தை, வில்லன் வேடங்களில் நடித்துள்ள எனக்கு, இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான வேடம் கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சி அளித்தது. கதைக்கு அவசியம் என, இயக்குனர் கூறியதால், இப்படி நடித்தேன். அந்த காட்சியை தெளிவற்ற முறையில் தான் காட்டுகின்றனர். எனவே, இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார், பிரகாஷ் ராஜ்.