அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோனன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் 2023ம் வருடம் ஜனவரி 12ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அக்டோபர் 2ம் தேதியன்று அயோத்தியில் சரயு நதிக் கரையில் நடைபெற உள்ள விழாவில் வெளியிடப்பட உள்ளது.
டீசர் வெளியீட்டிற்கான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ் இடம் பெற்றுள்ளார். வானத்தை பார்த்தபடி வானத்தை நோக்கி அம்பு எய்யும் ராமர் ஆக பிரபாஸ் தோன்றும் போஸ்டருக்கு அவரது ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளைக் கொடுத்து வருகிறார்கள்.
அக்டோபர் 2ம் தேதியன்று டீசருடன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாக உள்ளது. இன்று சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' வெளியான நிலையில் அடுத்த சரித்திரப் படமாக 2023 பொங்கலுக்கு 'ஆதி புருஷ்' வெளியாக உள்ளது.