எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
கர்நாடகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி திலக்ராஜின் மகன் ஜெயித்கான் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்திருக்கும் படம் பனாரஸ். ஜெயதீரா இயக்கி உள்ளார். ஜெயித்கானுக்கு ஜோடியாக சோனல் மாண்டீரா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே துளு மற்றும் கன்னட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இசையுடன் காதல் கலந்த திரில்லர் படமாக ‛பனாரஸ்' உருவாகி உள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பான் இந்தியா பிரஸ் மீட் நிகழ்ச்சி பெங்களூருவில் இரு தினங்களாக நடந்தது. படத்தின் டிரைலரை ஹிந்தி நடிகர் அர்பாஸ் கானும், டாக்டர் வி.ரவிச்சந்திரனும் இணைந்து வெளியிட்டனர். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
முதன்முறையாக தென்னிந்திய படம் ஒன்று பனாரஸ் ஏரியாவில் 95 சதவீதம் படமாக்கப்பட்டுள்ளது. பனாரஸின் அழகிய பகுதிகளான குகைகள், கோயில்கள், கங்கை நதி உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் முக்தி பவனின் முக்கியத்துவம், பாரத் மாதா மந்திர் மற்றும் அதன் வரலாற்று பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவ., 4ல் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.