மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த மும்பை நடிகை பூஜா ஹெக்டேவிற்கு அதன் பிறகு தமிழில் புதிய படங்கள் கமிட்டாகவில்லை. ஆனால் தெலுங்கு, ஹிந்தியில் புதிதாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இன்னும் வசீகரமாக தெரிவீர்கள் என்று சில அபிமானிகள் பூஜா ஹெக்டேவிடம் சொன்னதாகவும், அதனால் விரைவில் வெளிநாடு சென்று தனது மூக்கில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வைரல் நியூஸை பூஜாஹெக்டே இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதனால் இது குறித்து அவர் வாய் திறக்கும்போதுதான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.