கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை'. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். போலீஸ் வேடத்தில் சூரி நடித்துள்ளார். இதற்காக தனது உடற்கட்டையும் சிக்ஸ் பேக்கிற்கு மாற்றி நடித்துள்ளார். சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. தொடர்ந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடியும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விடுதலை படத்தின் முதல்பாகத்தை நவம்பர் முதல்வாரத்தில் வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.