175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு முயற்சி எடுத்தவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா, அடுத்தடுத்து மூன்று படங்களில் புக்காகி அங்கு பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்தபடியாக தமிழில் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார். புஷ்பா வில்லன் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.