சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
''பான் இந்தியா' என்ற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையைக் கேட்பதற்குக் கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறிக் கொள்ளட்டும், அது வரவேற்கத்தக்கது. நாமெல்லாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா என்று சொல்லப்பட்டதுண்டா ?, நான் இதுவரை அப்படிக் கேட்டதும் இல்லை,” என்று சில மாதங்களுக்கு முன்பு 'பான் இந்தியா' பற்றி கமெண்ட் செய்திருந்தார் மலையாள நடிகரான துல்கர் சல்மான்.
அவர் சொன்னது போலவே தற்போது ஒவ்வொரு மொழிக்கும் சென்று நடித்து தன்னை 'பான் இந்தியா' நடிகராக உயர்த்தி வருகிறார். மலையாளத்தில் சில பல ஹிட்களைக் கொடுத்த துல்கர் தமிழில் நடித்த 'ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களும், தெலுங்கில் நடித்த 'சீதா ராமம்' படமும் அவருக்கு மற்ற மொழிகளில் வெற்றியைக் கொடுத்தது. கடந்த வாரம் ஹிந்தியில் அவர் நடித்த 'சுப்' படமும் ஓரளவிற்கு வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று ஓடி வருகிறது.
தாய்மொழியான மலையாளத்தைத் தவிர மற்ற மொழிகளிலும் நேரடியாக நடித்து தான் சொன்னதற்கேற்றபடி உயர்ந்து வருகிறார் துல்கர்.